கலக்கும் கலாச்சாரம் !
சொந்தம் பந்தம் யாருமில்லை
சொந்த ஊரோ வெகு தூரம்
கண்டிக்கப் பெற்றோர் இல்லை
தண்டிக்கத் தலைவனும் இல்லை
முறுக்கான வாலிபம் - தானே
வருந்தி அழைக்கும் எஜமானி
தனியான சந்தர்ப்பம்
அனுபவித்தால் தவறென்ன?
எகிப்தின் கலாச்சாரத்தை
வலிய வந்த விபச்சாரத்தை
விலக்கி யோசேப்பு ஓடுகிறான்
விலங்கில் கிடந்தது ஒடுங்கினான்
கர்த்தர் கூட இருந்தததை
உணர்த்ந்ததாலே யோசேப்பு
பரிசுத்த கலாச்சாரத்தை
நடைமுறையில் காட்டினான்
கர்த்தருக்காய் வாழ்ந்ததால்
சிறை வாழ்வை மாற்றியே
தலைவனாய் உயர்த்தினார்
தூய வாழ்வு தொடர்ந்தது
சீரழிக்கும் கலாச்சாரத்தின்
கூரொழித்து பரிசுத்தமாய்
வாழ்ந்து நீ கலக்குவாய்
தேவன் உன்னை உயர்த்துவார்
ஆதியாகமம் 39 :7 -21 ; சங்கீதம் 105 : 18
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment