இது தான் கல்ல்லூஉர்ர்ரி கலாச்சாரமா?
சின்னத் திரையும் சினிமா உலகமும் நமக்கு காண்பிக்கும் கல்லுரி கலாச்சாரம் எது?
*கல்லுரி வளாகம் படிப்பதற்கு அல்ல, சைட் அடிப்பதற்குத் தான்!
*வகுப்புக்கு புத்தகங்கள் வேண்டாம், ஒரு நோட்டோ, பைலோ போதும்.
*வம்பு பண்ணத்தான் வகுப்பறையே தவிர, படிப்பதற்கு அல்ல.
*ஆடல், பாடல், கொண்டாட்டம் எல்லாம் வளாகத்தில் தான்.
*மாணவர் மதிக்கவல்ல, கேலிபண்ணிச் சிரிக்கவே ஆசிரியர்!
*கையில் சிகரெட் இல்லாவிடில் மாணவனாகும் தகுதி இல்லை.
*தண்ணி இல்லாமல் பார்ட்டி கிடையாது.
*அடிதடி சண்டை நம் பெருமையின் விளையாட்டு.
*கேர்ல் பிரண்ட் இல்லா வாழ்க்கை வீண்.
*பேருந்தில் படியில் தொங்கினால் தான் மாணவன் என்ற பெருமை கிடைக்கும். (மாதம் ஒருவன் விழுந்து செத்தாலும் பரவாயில்லை .)
*போர் அடிக்கும் நேரமெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணலாம்.
*அரசியல் வாதிகளின் காசால் கல்லூரி எலெக்சன் நடக்கும்.
*போலிஸ் எங்கள் பரம விரோதி.
*தற்கொலை எனபது விளையாட்டுப் போன்றது.
சீனியர் என்ற பரம்பரையை பகைக்கக் கூடாது. நாம் சீனியர் ஆனதும் நம் வாலை ஆட்டலாம்.
*என் அப்பா தான் என் ATM*கல்லூரி காண்டீனில் கற்றுக் கொள்ளும் பாடங்கள் மிக அதிகம்.
மாணவர்களே,எச்சரிக்கை! உங்கள் படிப்பையும் வாழ்வையும் வீணாக்கும் கலாச்சாரத்தை இனம் கண்டு கொண்டு விலகுங்கள்.
ஜெசி, சென்னை
No comments:
Post a Comment