வேதத்தில் சில வேஷங்கள்! (இந்த நிகழ்சிகள் வரும் வேத பகுதிகளை நீங்களாகவே கண்டு பிடியுங்கள். முடியாவிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை எடுத்து வாசியுங்கள்) 1 .பழத்தோட்டத்தில் பாம்பு வேஷம் போட்டுத்தானே முதல் பெண்ணை சாத்தானும் கெடவைத்தானே 2 . அண்ணனின் வேஷத்தோடு பேசிமெழுகி யாக்கோபும் சுதந்தரித்தான் ஆசிகளை 3 . வேசியாய் வேஷம் போட்டு தாமாரும் மாமனுக்குப் பெற்றெடுத்தாள் இருகுமாரர் 4 . எகிப்தியனாய் வேஷம் போட்ட யோசேப்பும் வேஷம் கலைத்திட்டான் பாசத்துடன் 5 . ஆசிர்வதிப்பதாய் போட்ட வேஷத்தாலே பிலேயாம் பெருகச்செய்தான் வேசித்தனம் 6 . தூரத்தாராய் வேஷம் போட்ட கிபியோனியர் உயிருக்காய் ஏமாற்றி அடிமையானார் 7 . நல்லவள்போல் பால் தந்தாள் கிண்ணியிலே நெற்றியிலே யாகேல் அடித்தால் ஆணியினை 8 . நேசிப்பதாக நடித்திட்ட பெண்களாலே இழந்திட்டான் சிம்சோனும் கண்களையே 9 . பயித்தியமாய் வேஷம் போட்ட தாவீதும் உயிர் தப்பி ஓடினானே துதிகளுடன் 10 . வேஷமாறி சாமுவேலை எழுப்பியுமே சாபத்தை சவுலுமே தளுவினானே உலகத்தின் வேஷத்தை விடுவதாலே மறுரூபம் ஆவோமே கிறிஸ்துவாலே - ரோமர் 12 : 1 ,2 1 . ஆதி. 3 :1 ; 2 . ஆதி. 27 : 19 ; 3 . ஆதி. 38 :14 ; 4 . ஆதி 42 : 23 ;45 : 1 ; 5 . எண். 25 : 1 ; வெளி 2 : 14 ; 6 . யோசுவா 9 ; 7 . நியா 5 : 25 , 26 ; 8 . நியா 14 :16 ; 16 : 15 , 21 ; 9 . 1 சாமுவேல் 21 : 13 -15 ; சங்கீதம் 34 :1 ; 10 . 1 சாமுவேல் 28 : 8 , 19 .- Show quoted text -
-- "For our Gospel came to you not only with words, but also with power, with the Holy Spirit and with much assurance. You know what manner of people we were among you when we were among you." - 1 Thes. 1:5
Tuesday, June 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment