Tuesday, June 15, 2010

ரத்தம் என்றால் இளக்காரமா?

ரத்தம் என்றால் இளக்காரமா? வழக்கம் போல வாயில் வந்தது, "ஆண்டவரே இன்றும் உம்முடைய ரத்தத்தால் என்னை சுத்திகரியும்." ஜெபித்து முடிக்கும் முன்பு ஆண்டவர் கேட்டார், "ரத்தம் சும்மா வருமா? ரத்தம் பாட்டிலில் அடைத்து வைத்து இருக்கிறதா? ரத்தம் அவ்வளவு மலிவானதா? காயம் பட்டால் தான் ரத்தம் வரும். ரத்தத்தோடு, வலியும் வரும். "நீ ஒவ்வொரு தடவை பாவம் செய்யும் போதும், என் ரத்தத்தால் கழுவ கேட்கும் போது அது என் இதயத்தில் காயத்தையும், என் மனதில் வலியையும் உண்டாக்குகிறது. " ஆண்டவரின் இந்த விளக்கம் எனக்கு புதிதாக இருந்தது. நான் தவறி, மன்னிப்பு கேட்கும் ஒவ்வொரு முறையும் ஆண்டவர் எத்தனை வேதனைப்படுகிறார்! அவர் மன்னிக்கிறார், உண்மை தான். ஆனால், அது அவருக்கு எவ்வளவு வேதனை கொடுக்கிறது! ஆண்டவரே, உம்மை வேதனைப்படுத்தாமல் வாழ உதவும்.
ஜெசி

No comments: