கலாச்சார மோகம் "ஹேய் மச்சி" "வாடி கண்ணு" என்ற வார்த்தைகள் கல்லூரி வளாகங்களில் சென்னை முதல் குமரி வரை வழங்கும். பள்ளிப் படிப்பு வரை பெட்டி பாம்பாக இருந்த குக்கிராம மாணவனும் கல்லூரி வந்ததும் உருத்தெரியாமல் மாறி விடுகிறான். எப்படி? அவன் கல்லூரியில் கண்ட கலாச்சாரத்தைபின் பற்றுவதாலேயே. கலாச்சாரம் மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. மாறும் கலாச்சாரத்தை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது.பல நேரங்களில் மேற்கத்திய கலாச்சாரத்தை நாம் கிறித்தவ பண்புகளோடு குழப்புகிறோம். எனவே தான் குடிப்பதும் நடனமாடுவதும் தான் கிறித்துவம் என பிறர் எண்ணுகிறார்கள். அல்லது முதல் நூற்றாண்டு யூத கலாச்சாரங்களை அவற்றின் பின்னணி தெரியாமல் பின்பற்ற, பிறர் மேல் திணிக்க முயலுகிறோம். இதனால் தான் பல சபைகளில், ஐக்கியங்களில் குழப்பங்கள். வேத போதனைகளை அவற்றின் கலாச்சார, சரித்திர பின்னணியுடன் படித்து நாம் பின்பற்றவும் போதிக்கவும் வேண்டும். ஆண் பெண் உறவுகளை எடுத்துக்கொள்வோம். இதில் தமிழரின் பாரம்பரிய கலாச்சாரம் போற்றத்தக்கது. ஆண் பெண் உறவு நெருப்பும் பஞ்சும் போன்றது என்பார்கள். ஆனால் காலப்போக்கில் இவை மாறி விட்டது. நல்ல எண்ணத்தோடு நட்பு கொள்வதில் தப்பில்லை. ஆனால், மேலை நாடுகளில் போல் உறவுகள் கொள்வதால் குடும்ப உறவுகளே பாதிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத விதத்தில் விவாக ரத்துகள் பெருகிவருகிறது.
பொருளாதார நிலையிலும் மேலை நாடுகளின் கலாச்சாரம் நம்மை பாதிக்கிறது. உணவு பொருட்களை வீணாக்குவது இந்தியரால் சகிக்க முடியாத ஒன்று. ஆனால் மேலை நாடுகளில் இது சாதாரணம். பண பெருக்கத்தினால், நம் நாட்டிலும் உணவை வீணாக்குவதை பெருமை ஆக நினைக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. உலகின் ஒரு பக்கம் மக்கள் உணவு இல்லாமல் செத்துக்கொண்டு இருக்கும் போது, உணவை வீணாக்குவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். தகாத சில பழக்கங்களை புது கலாச்சாரம் என நினைப்பது அறிவல்ல. உதரணத்துக்கு, குடி பழக்கத்தை எடுத்துக்கொள்வோம். சில மேலை நாடுகளில் குளிர் அதிகம். அங்கு கொஞ்சம் குடிப்பது அவர்களின் பழக்கம். ஆனால் இப்போது குடிப்பது எனபது சாதாரணமாக எல்லோரும் பழகி விட்ட ஒன்று ஆகிவிட்டது. கல்லூரிகளிலும் கார்பரேட்களிலும் வீக் என்ட் பார்ட்டிகள் புகைக்க, குடிக்க பலரை ஏவுகிறது. தகாத உறவுகளும் இங்கு உருவாகிறது. இதனால் அநேகரின் குடும்பங்களும் உடல்நிலையும் சீர் குலைந்து வருகிறது. நம்மை சுற்றி மாறிவரும் கலாச்சாரத்தை எல்லாம் நாம் பின் பற்ற வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் அவைகளை எல்லாம் நாம் எதிர்க்க வேண்டும் என்றும் கிடையாது. வேத போதனைக்கு எதிரான கலாச்சாரத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க வேண்டும். அவைகளின் தீமை பற்றி நாம் சமுதாயத்துக்கு உணர்த்த வேண்டும்.
ஜெசி
Tuesday, June 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment