Tuesday, June 15, 2010

"முகமூடியா? கண்ணாடியா?"

சிந்தனைக்குச் சிலவரிகள்.... "முகமூடியா? கண்ணாடியா?" காலையில் எழுந்தததும் கண்ணாடியில் என்னைப் பார்த்து, நான் நானாக இருப்பதை நினைத்து படைத்தவரைத் துதிக்கிறேனா ? நான் ஏன் நானாக இருக்கிறேன்,இன்னும் கொஞ்சம் கலராக, சற்று உயரமாக இருந்திருந்தால் நல்லாயிருக்குமே என மனம் வெதும்புகிறேனா? கண்ணாடி முன் கால் கடுக்க நின்று கண்ட கண்ட கிரீமையும் கிலோக்கணக்கில் தடவி என் இயல் தோற்றத்தை மறைக்கிறேனா?பெற்றவரிடம் ஒரு முகம், நண்பரிடம் மற்றொன்று, தனிமையில் வேறொன்று, என்று ஒரு நாளில் பல பல முகமூடிகளை அணிகிறேனா? ஞாயிறு ஆலயத்தில் பக்தி வேஷம், மற்ற ஆறு நாளும் வீட்டிலும் வெளியிலும் துவேஷம் எனபது தான் என் சாட்சியா? என் உண்மையான நிலைமைக்கும் நான் கொடுக்கும் தோற்றத்துக்கும் இடைவெளி எவ்வளவு? உள்நிலைக்கும் தோற்றத்துக்கும் இடைவெளி பெரிதானால் என் மனநிலையே பாதிக்கப்படுமே! உள்ளும் புறம்பும் ஒரே நிலை எனபது இறைவன் விரும்பும் நிலையல்லவா? "வந்து பாருங்கள்" என அழைத்த கிறிஸ்துவின் வாழ்வு கண்ணாடி போன்றதல்லோ? கிறிஸ்துவின் பலத்தால் என் வாழ்வும் ஊடுருவும் கண்ணாடியாய் சாட்சியுடன் ஜொலிக்கட்டுமே! 'ஜெசி', சென்னை

No comments: